Wednesday, June 3, 2009

வேலைக்கு போறேன்!

நாளைக்கு நான் வேலைக்கு 
போறேன் நண்பர்களே!
பத்துச் சாமான் சுத்திக்குடுத்து 
பத்துரூபா சம்பாதிக்கப் 
போறேன் நண்பர்களே 
Image Credit: Google
குடும்பத்துல கஷ்டமுங்க 
கல்விக்குக் காசில்லிங்க 
கனவெல்லாம் கலைஞ்சுடுச்சு 
நாடகமும் முடிஞ்சிருச்சு 
அடுத்த வேஷமும் போட்டுக்கத்தான் 
நேரமும் வந்துருச்சு 
படிக்கப் பிடிக்கலே 
பள்ளிக்கூடத்தை பிடிச்சிருக்கு 
வாழப் பிடிக்கலே 
வாழ்க்கையைப் பிடிச்சிருக்கு 
நல்லாச் சொன்னிங்க சிநேகிதர்களே 
பொழைக்கத் தெரியாதவன் இவன்னு 
பொழைக்கத்தானுங்க போறேன் 
போய்ட்டு வாறேன் தோழர்களே!

Image Credit : Google
                                            



இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான "சூரியகாந்தி" இதழில் 03.06.2009 இல் வெளியான எனது கவிதை. இது மலையக இளைஞர்களை எண்ணி எழுதப்பட்டதாகும். 

வேலைக்கு போறேன்! 
#மலையகம் #வேலை #உழைப்பு #இளைஞன் #பள்ளிக்கூடம் #வாழ்க்கை #நேரம் #கல்வி #நாடகம் #கவிதை #சூரியகாந்தி